Saturday, April 29, 2006

இதற்காகத் தான் எல்லாமே!!

பெயரளவில் ஜனநாயகம் பிதற்றி
பெருமகனாய் அலங்கரித்து
சீர் கெட்டு சிங்களவனுக் அடிவருடி
சதை வளர்க்கும் செய்த கூட்டம்
செய்த தப்பால் தான்!!

தேசிய விடுதலை என்று தேடிய கூட்டமதில்
பாசிய துரோகத்தனம் பல்லாயிரம்
தமிழரை விலை பேசி
நீச படைகளைக் கொண்டு எம்
நிம்மதியை தொலைத்தால் தான்!!!

கட்டிய கோவணத்தையும் களவெடுத்து
சிங்களவனுக்கு செம்மல் பட்டம் கொடுத்து
தன் வாழ்விற்காய் தன் இனத்தை
துச்சமென்று காட்டி விலை பேசி
எச்சமின்றியே அழிக்க உதவிய
பாசியத் துரோகிகள் செய்த கபடத்தால் வந்த வினை!!

பெற்றவளையும் உற்றவளையும் பேரினவாதம்
சத்தமின்றி இச்சை தீர்த்து சாய்த்த போது
அந்தச் சா கேட்க நா எங்கு போனது?
கயவர்களின் காசு உன் கண்ணை மறைத்ததுவா?

பெண்கள் பெண்மை இழக்க,
போரில் அது சகஜம் என்று மூடி மறைத்த
துரோகக் கும்பலில் நீயும் ஒருத்தன் தானோ?

மரணத்தால் நாம் மகிழ்கின்றோம்!!
சிங்களவனுக்கு அடிவருடி சீர் கெட்டு நிற்கும்
உன் பெற்றவள் போலின்றி
மறைந்தாலும் மண்ணக்காக என்றபடி மறைந்தவள்
பெரும் வாழ்வுநிச்சயம் உலகம் சேவிக்கும்!!

1 Comments:

Anonymous Anonymous said...

எதிரியின் இன அழிப்புக்கு எதிராகப் போராடும் எம் மக்களின் குருதியில் எழுதுவதல்ல ஜனநாயம். அது *-*பாசியத்*-*(Hiiiii) துரோகம்!!:-))))

11:26 AM  

Post a Comment

<< Home