திரு:பாலகுமாரனிடம் இருந்து..
தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்நாள் சனிக்கிழமை (29.04.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
ஈழநாதத்தின் தலைப்புச் செய்தியாக சிறிலங்கா இராணுவம்- ஒட்டுக்குழுக்களின் அராஜகம்- ஜெனீவா பேச்சின் பின் 103 அப்பாவித் தமிழர்கள் படுகொலை என்று இடம்பெற்றுள்ளது.
சிங்களம் எப்போதும் எங்களோடு பேசும் மொழி. "இராணுவப் படுகொலை மொழி" என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிரூபணத்தின் ஊடே மூன்று விடயங்களை முன்வைக்கிறோம்.
முதலாவது மகிந்தரின் உத்தி என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. போருக்கு முன்னைய சிறிய போரை அல்லது நிழல் போரை நடத்த தயாராகிவிட்டார். அவர் சொன்னதுபோல, "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை அவர் இடைநிறுத்தியிருக்கிறார்" என்கிற அளவில் அவரது போர் உத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே போரை நடத்துவதற்கு முன்னர் இன்னொரு சிறிய போரை நடத்த அவர் ஆயத்தமாகிவிட்டார் என்பது தெளிவாகிறது.
இரண்டாவது வழமைபோல் இந்தப் படுகொலைகளைப் பார்த்து உலகம் மெளனம் காத்தது எங்களை மனம் நோக வைத்தது.
சர்வதேசத்தையே கண்டனம் செய்து விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த அறிக்கையை மிக முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச ஊடகங்கள் யாவும் வெளியிட்டன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
- இனிமேல் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை உலகம் தொடங்கிவிட்டது.
- புலிகள் மேல் தாங்கள் அழுத்தம் கொடுக்கப் போகிறோம் என்பதை மெளனம் காத்ததன் மூலமும் பேசாதிருந்ததன் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அதேவேளை
சம்பூர் படுகொலைகளைத் தாங்கள் கவனிக்காமல் இல்லை என்பதற்காக அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
தொடக்கத்தில் ஒடுக்கப்படுகிற மக்கள் மீது கருணை காட்டாமல் ஒடுக்குகிற அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராடுகிற இயக்கத்தை ஒருதரப்புக்குக் கண்டனம் செய்தது. இப்போது இருதரப்புக்கும் கண்டனம் செய்ய முனைந்துள்ளது.
ஒடுக்குகிற அணியையும் ஒடுக்கப்படுகிற அணியையும் ஒரே தட்டில் தராசில் வைத்து கண்டனம் செய்வது நம்ப முடியாத ஒரு செய்தியாக உள்ளது.
எது சரி? எது தவறு என்பதை உலகத்தால் கணிக்க முடியாது இருப்பது கூட எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்.
ஆக, விரைவில் உலகம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒருதரப்பை உலகம் கண்டனம் செய்ய வேண்டும். அது எந்தத் தரப்பு என்பது காலம் சொல்லப் போகிற பதிலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் நீண்ட மெளனத்தை காத்துக் கொண்டு வருகிறோம்.
இன்னொரு ஒரு முக்கிய செய்தியை இந்த இராணுவ நடவடிக்கை மூலம் எங்கள் மக்களுக்கு மகிந்தர் சொல்லியிருக்கிறார்.
மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் எதுவித வேறுபாட்டையும் இனி காணப்போவதில்லை என்பதை மகிந்தர் விளக்கியுள்ளார்.
அதாவது மக்கள் ஒரு நிலையில் போராளியாக மாற வேண்டும் என்பதுதான் மகிந்தரின் செய்தி. அப்படியானால் மக்கள் எப்போது போராளியாவார்கள்? மகிந்தர் தான் நினைக்கிற போதுதான் நடக்கும். ஆக மக்கள் ஒரு புதிய பரிமாணத்துக்குப் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள போராளியாக மாற வேண்டிய காலம் இது.
மக்கள் போராளிகளாக மாறி- மக்கள் படைகளைக் கட்டி- மக்கள் சேனைகளை உருவாக்கி- யுத்தம் நடத்தி வென்ற வரலாறு வியட்நாமில் நடந்திருக்கிறது.
வியட்நாம் பற்றி ஏற்கனவே நாம் பேசியிருந்தாலும் இப்போதும் சில கருத்துக்களை முன்வைக்கிறோம்.
வியட்நாமின் பழமொழி அல்லது புதுமொழியாக முன்னர் நாம் குறிப்பிட்டிருந்தோம்
போரிடுங்கள் பேசுங்கள்
பேசுங்கள் போரிடுங்கள்
என்கிற மொழிக்கு ஊடாக வியட்நாமின் வரலாறு நடந்த விதமும் வெகுநுணுக்கமாகவும் இறுக்கமாகவும் இராணுவஇ இராஜதந்திர அரசியல் வழிமுறைகளை ஒன்றிணைத்த மூலோபாயத்தை சுமார் 10ஆண்டுகாலம் கடைபிடித்தனர்.
குறிப்பாக 1965 ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்த உத்திகளைக் கடைபிடித்து
"விடுதலை ஒரு நாளில் வருவதில்லை- ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின் அது ஒருநாள் வரும்" என்ற செய்தியை
1973 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மற்றும் 1975 ஆம் ஆண்டு படையெடுப்போடு வியட்நாம் நிரூபித்தது.
10 வருடகாலமாக பேச்சும் போருமாக கழிந்த வரலாறு இன்றைக்கு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும் உருவாகிறது.
இனிமேல் பேச்சோடு போருமாக போரோடு பேச்சுமாக நடக்கப் போகிறது என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம்.
இறுதியில் வியட்நாம் இராணுவ வழிமூலம் தனது வெற்றியைப் பெற்றுக் கொண்டது என்பதையும் நான் இங்கே மனதில் கொள்ள வேண்டும்.
போரின் காரணமாக மிக உச்சகட்டமான இழப்பைச் சந்தித்தது நாடு வியட்நாம். உதாரணமாக 1965 ஆம் ஆண்டுக்கும் 1973 ஆம் ஆண்டுக்கும் இடையில் 14 மில்லியன் தொன் பீரங்கிக் குண்டுகள், வான்வழிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இரண்டாம் உலகப் போரில் பாவித்ததைவிட 3 மடங்கு அதிகமாகும்.
இதேபோல் அண்மையில் எங்கள் சம்பூரில ஒரு குறிப்பிட்ட தொகையான தொன் வெடிபொருட்கள் எங்கள் மக்கள் மீது கொட்டப்பட்டுள்ளது.
வியட்நாமிய மக்களின் மரபு ஒன்றை நாம் நினைவில் கொள்வோம்.
வியட்நாமிய வரலாற்றில் அம்மக்கள் மூன்று விடயங்களை முக்கியமாகக் கொள்கிறார்கள்.
வீடு, நிலம் மற்றும் இறந்தவர்களது நினைவிடங்கள் ஆகியவற்றில் எதிரியானவன் எந்த வகையிலும் உள்நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களது திடமான முடிவு.
"வீட்டில் வாழும்போது உயிரோடு வாழ வேண்டும்- உயிரற்ற நிலையில் நினைவிடங்களில் வாழ வேண்டும்" என்பதை புனிதமாகக் கொண்டு இவற்றில் ஒரு வகையிலும் ஆக்கிரமிப்பாளன் கால் வைக்க விடக்கூடாது என்கிற அடிப்படையில் வியட்நாமிய மக்களின் போர் மரபு உருவானது.
அதேவகையில் உலக மக்களின் அனுபவங்களிலிருந்தும் தனக்கு வேண்டியதை வியட்நாம் கற்றுக் கொண்டுள்ளது.
ஜெனரல் ஜியாப் என்பவர் வியட்நாமின் முக்கிய தளபதி. மக்கள் சேனைகளைக் கட்டிய அனுபவம் உள்ளவர். அவரது நூல் ஒன்றின் கருத்துகளை முன்வைக்கிறோம்.
புரட்சிகர மக்களை ஆயுதபாணிகளாக்குதலும் மக்கள் படையும் என்று 1960களில் மார்க்சீச சிந்தனைகளின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை எங்களுக்குப் பொருத்தமானவற்றை தெரிவு செய்து எங்கள் மக்கள் மனதில் கொள்வதற்காக சிலவற்றை தருகிறோம்.
"ஆயுதமேந்திய எழுச்சியிலும் புரட்சிகரப் போரிலும் அதேபோல் மக்கள் அனைவரும் பங்கு கொள்ளும் தேசியப் பாதுகாப்பிலும் தேசிய விடுதலைப் போரிலும் அதுபோல் தாய்நாட்டைப் பாதுகாக்கும் போரிலும் வலிமை மிக்க ஒரு மக்கள் சேனையைக் கட்டும்போதே பரந்துபட்ட மக்கள் திரளினையும் ஆயுதபாணிகளாக்க வேண்டும். மக்களின ஆயுதப்படைகளை மக்கள் சேனைகளின் அத்திவாரமாகக் கருத வேண்டும். மக்கள் சேனையை மக்கள் படையின் கூறாகக் கருத வேண்டும்" என்கிறார்.
இங்கே அவர் மக்கள் சேனை என்பதை நிரந்தர இராணுவத்தையும்
மக்களின் ஆயுதப் படை என்பதை மக்கள் பங்குபற்றக் கூடியதையும் கருத்தில் கொண்டு தெரிவித்துள்ளார்.
இத்தகைய முடிவுகளை எடுத்து வியட்நாமின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டது.
வியட்நாமின் மக்கள் சேனை எவ்வாறு உருவாக்கப்பட்டது? என்பதைச் சொல்லுகிறோம்.
வியட்நாமின் மக்கள் படை என்பது- தற்காப்புப் படைகளும் குடிப்படைகளும் கொரில்லா படைகளுமாக வளர்ச்சியடைந்து இறுதியில் மக்களின் ஆயுதப் படைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
முதலாவது பிரதான படை என்று சொல்லக் கூடிய நிரந்தரப் படை
இரண்டாவது பிரதேச படை என்பது பிரதேசங்களைக் காப்பதற்கான படை
மூன்றாவது குடிப்படை என்று சொல்லக் கூடிய மக்கள் அனைவரும் பங்குபற்றக் கூடிய ஒரு படையணியாக உருவாக்கப்பட்டது.
இதில் இராணுவ ரீதியாக நிரந்தரப் படை அணி என்பது மிக முக்கியமானது. நாடு முழுவதும் முக்கியப் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்ட இயங்கு படை இதுதான். எதிரியின் சேனையை குறிப்பாக இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இயங்கு படையை நிர்மூலமாக்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை இந்தப் படை மேற்கொண்டது.
ஒவ்வொரு போர் முனைகளிலிருந்தும் ஒவ்வொரு திட்டவட்டமான நிலைமைகள்- கடமைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப பிரதேச படைகள் கட்டப்பட்டன.
இதை ஜியாப் அவர்களின் வார்த்தைகளில் கூறினால்,
"பிரதேசங்களில் நடத்தப்படும் ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையாக அவை அமைகின்றன. வலுவான படை அலகுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரதேச படைகள் போர் நடவடிக்கைகளில் தமது படைகளைத் தேவைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஒன்று குவித்தும் பரவலாக்கியும்...." என்று அந்த வரிகள் செல்கின்றன.
குடிப்படைகள் என்று சொல்லப்படுகிற மக்களினது ஆயுதப் படைகள் குறித்தும் மிக விரிவாக ஜியாப் அவர்கள் கூறியுள்ளார்.
இன்று எங்கள் நிலையில் போராளிகளாக மக்கள் மாற வேண்டுமாயின்
மக்களை ஆயுதமயமாக்குதல்- சேனைகளில் இணைத்தல் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டிய காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் வியட்நாமின் அனுபவங்கள் எங்களுக்குப் பயன்படும்.
தமிழீழ மக்கள்- வியட்நாமிய மக்களினது சாதனைகளைப் பற்றி அறிவதும் முக்கியமானது.
அந்த வகையிலும் ஜியாப்பின் கருத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.
"போரில் குடிப்படைகளும் தற்காப்புப் படைகளும் ஒரு பெரும் பாத்திரத்தை வகித்தன."
இந்தத் தற்காப்புப் படைகளும் குடிப்படைகளும்தான் தற்போது நாங்கள் அமைக்க விரும்புகிற மக்கள் படையணியின் வியட்நாம் மரபாக இருக்கிறது.
"கலப்பை ஒரு கையிலும் ரைபிள் ஒரு கையிலும்
சுத்தியல் ஒரு கையிலும் துப்பாக்கி ஒரு கையிலும்
என்ற இயக்கங்களில் இளைஞர்களும் முதியவர்களும் ஆடவரும் பெண்டிரும் கிராமங்களிலும் நகரங்களிலும் சமவெளிப்பகுதிகளிலும் மலைகளிலும் எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதிலும் செயல்நுட்பத்துடன் பங்குபற்றினர். அவர்கள் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகளை கிராமப்புறங்களில் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வலைப்பின்னல் போல் அமைத்தனர்.
குடிமக்களையும் உற்பத்தியையும் பாதுகாத்து எல்லா உயரங்களிலும் எல்லா திசைகளிலும் பறக்கின்ற எதிரியினது விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் அடங்கிய பின்னலமைப்பை உருவாக்குவதில் விமான எதிர்ப்புப் படையுடனும் விமானப் படையுடனும் நெருக்கமாக ஒத்துழைத்தனர்."
இவ்வாறாக விரிந்து செல்லும் வசனங்களுக்கூடாக இங்கே நாம் அறிய வேண்டியது-
தற்போது இரண்டு கைகள் உள்ள எங்கள் மக்கள்-
ஒரு கையில் தொழிலுக்கான கருவிகளையும்
மறு கையில் ஆயுதத்தையும் ஏந்த வேண்டிய காலம் வந்துவிட்டது
வியட்நாம் மக்களினது சாதனைகளை வாசித்தால் இன்றைக்கு நம்ப முடியாததாக இருக்கக் கூடும். இருந்தபோதும் சமாதான காலத்திற்கூடாக உருவாக்கப்பட்ட படை அரசியல் படை என்று சொல்லப்பட்டது.
அந்த அரசியல் படையை சமாதான காலத்திலிருந்து போர்க்காலத்திற்குத் தள்ளப்பட்ட போது-
எங்கள் தமிழீழம் போல்
தற்காப்புப் படை நிலையிலிருந்து போரிடும் படையாக மாற்றிய வளர்ச்சியையும் நாங்கள் பார்க்கிறோம்.
தமிழீழத்தில் நீண்டகாலமாக போர் மரபு இருந்தது. இடையில் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் வியட்நாமில் பல நூற்றாண்டுகாலமாக சீனாவுக்கு எதிராக- ஜப்பானுக்கு எதிராக- பிரான்சுக்கு எதிராக- அமெரிக்காவுக்கு எதிராக என்ற போர்ப் படையணி மரபு இங்கு இல்லாவிட்டாலும் கூட வியட்நாமிய அனுபவங்களை இங்கே நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
நாங்கள் வியட்நாம் அனுபவத்திற்கூடாக -
விடுதலை வலயங்கள் அல்லது புரட்சிகரத் தளங்கள் அமைக்கப்பட்டது போல்
இன்று தமிழீழத்தில்
வன்னி என்பது விடுதலை வலயமாக- புரட்சித் தளமாக- மையமாக இருப்பதால் எங்கள் மக்கள் இக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஜியாப் சொன்னது போல் அவர் புரட்சி என்கிறார்.. நாம் விடுதலை என்று சொல்லலாம்.
"விடுதலையின் அனைத்துக் கடமைகளிலும் மக்களே அதற்குத் திடமான அடிப்படையாக அமைகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியல் படைகளே ஆயுதப் படைகளின் திடமான தளமாகும். மக்களின் ஆயுதப் படைகளே புரட்சி சேனையின் திடமான அடிப்படைத் தளமாகும்." என்கிற செய்திக்கூடாக நாம் இங்கே ஒரு கட்டுமானத்தைக் கட்ட வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே எங்கள் விடுதலை அணியில் நிரந்தரப் படை அணியும் அதற்கு துணையான அணியும் கட்டப்பட்டுள்ளது.
இப்போது மூன்றாம் படையணி ஒன்றை அற்புதமாக- நேர்த்தியாக கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.
அந்த வகையில் மக்களை போர் உத்திகளுக்கூடாக போரணியாக்கி போர் உத்திகளை மக்களுக்கும் கற்க வைத்து ஒரு மகத்தான அரசியல் படையையும் வலிமை மிக்க ஆயுதப் படையையும் ஒன்றிணைக்க வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம்.
இதைத்தான் மகிந்தரின் இராணுவ உத்திகளும் குண்டுவீச்சுகளும் சர்வதேச அழுத்தங்களும் உருவாக்கி உள்ளன.
தொடர்ந்து வரக்கூடிய இந்த மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிற மிகப் பெரிய கவசமாக- அற்புதமான ஒரு படையாற்றலாக- மக்கள் படையணியை எங்கள் தேசத்திற்கேற்ற வகையில் உருவாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆயத்தமாக வேண்டும் என்றார் க.வே.பாலகுமாரன்.
நன்றிகள்: புதினம்
இதைத் தான் தியாகி திலீபனும் சொன்னான். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று" எதிரிகளும் துரோகிளும் வெல்லப்படும் அந்த நாளில் தமிழீழ தேசியக் கொடி சுதந்திரக் காற்றில் வீராப்புடன் ஆடும்.

0 Comments:
Post a Comment
<< Home