Saturday, May 06, 2006

கருணா குழுவின் வரலாறு முடிவு!!!

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தின் காசம் குளம் என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த கருணா குழு முகாம்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்ட செய்தி மூலம் விடுதலைப் புலிகள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

01) எங்கும் எப்போதும் சென்று தாக்கும் திறன். விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

02) போர் நிறுத்த உடன்பாட்டின்படி அரசு செய்யாத ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவை விடுதலைப் புலிகள் செய்தமை.

03) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் கருணா குழுதான். தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை கடத்தியது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

04) கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் படையினரால் வழங்கப்பட்டமை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

05) படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் கருணாகுழு இயங்கி வருவதற்கான ஆதாரங்கள். 06) கருணா குழு முகாம் மீது விடுதலைப் புலிகளின் சிறப்புப்படையணி தாக்குதல் நடத்திய போது படையினர் கருணா குழுவுக்கு உதவியதிலிருந்து கருணா குழுவினருக்கு இராணுவம் உதவுவது போன்ற பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருணா குழு உட்பட இதர ஆயுதக் குழுக்களை கையகப்படுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக கருணா குழுவை விடுதலைப்புலிகளுக்கு நிகரான ஒரு அமைப்பாக தென்னிலங்கை பேரினவாத ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின் படைத் தரப்பினரும் கருணா கும்பலின் உதவியுடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்கலாம் என்ற கற்பனாவாதத்தில் மிதந்தனர்.


எனினும், பொலநறுவை காசம்குளம் பகுதியில் கருணா கும்பலின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் 'எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்' என்பதை போராளிகள் மீளவும் நிலைநிறுத்திக் காட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைப் புறமான ஓர் இடமே காசங்குளம். இது வெலிக்கந்தையிலிருந்து கிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. பொலநறுவை வெலிக்கந்தைக்கு வடக்கே ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள திபுலானை என்ற இடத்திற்கும். காண்டக்காடு என்ற இராணுவ முகாமிற்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் கருணா குழுவின் முகாம் இருந்;துள்ளது. இவர்களே தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் உட்பட பல்வேறு கடத்தல் கொலை, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவ தினமான சனிக்கிழமை நள்ளிரவு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது கருணா குழுவைச் சேர்ந்த 31 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துப் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களைப் படையினர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஐவரை விடுதலைப் புலிகள் உயிருடன் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விடுதலைப் புலிகளால் கருணா குழுவிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பி.கே.எல்.எம்.ஜி - 02,
ஆர்.பி.ஜி- 01,
81 மில்லிமீற்றர் மோட்டார்- 01,
ஏ.கே.எல். எம்.ஜி.கள் - 06,
தன்னியக்க றைபிள்- 16,
கைத்துப்பாக்கிகள் - 02,
தகவல் தொடர்பு சாதனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முகாம் தாக்கியழிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடமிருந்து கடத்தப்பட்ட இருவாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது கருணா குழுவுக்கு உதவி செய்யும் வகையில் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி முகாம் திரும்பிய பின்னர் படுகாயமடைந்த கருணா கும்பலை படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்து தெரிவிக்கையில்:- ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்த உடன்படிக்கையில் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை அரசு களையவில்லை. இத்தகைய சூழலில் தான் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம். எதிர்காலத்திலும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாது தொடர்ந்து அரசு இயங்கி வந்தால் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என தயாமோகன் குறிப்பிட்;டிருந்தார்.

இதேவேளை கருணாகுழு முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது கருணா குழுவின் முக்கிய நபர்களான சின்னத்தம்பி - மார்க்கன், றியசீலன் உள்ளிட்ட பலர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி முகாமிலிருந்த கருணா கும்பலையே திருமலை, வாகரை மற்றும், வாழைச்சேனை பகுதிகளில் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு படையினர் பயன்படுத்தி வந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எந்த ஒரு ஒட்டுக்குழுவும் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றலுக்கும், வலிமைக்கும் முகம் கொடுத்து தாக்குப்பிடிக்க முடியாது என்பதுடன் எங்கு சென்றாவது தமிழ்த் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழிக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை மீளவும் நிருபித்துள்ளனர்.

அடுத்ததாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்தியபோது விடுதலைப் புலிகளுக்கு கருணா கும்பல் ஒரு சவாலான சக்தி என கற்பனைவாதத்தி;ல் மிதந்த பேரினவாத சக்திகளுக்கு அதனை காசங்குளம் தாக்குதல் மூலம் யார் சவாலான சக்தி என்பதை வெளிப்படுத்தி விட்டனர். அடுத்ததாக வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கொலையாளிகளை, கடத்தல்காரர்களை முகாமுக்குள்ளும் முகாம்களுக்கு அருகிலும் வைத்துக் கொண்டு பொலிசார் கண் துடைப்பிற்கு வெலிக்கந்தைப் பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் மாத்திரம் தேடுதல் நடத்தப்பட்டது.


ஆனால் காசங்குளம் கருணா முகாம் தாக்குதல் மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சொந்தமான வாகனம் மீட்கப்பட்டதிலிருந்து தமிழர் புனர் வாழ்வுக்கழகப் பணியாளர்களை கருணா குழுதான் கடத்தியுள்ளனர் என்ற விடயத்தை விடுதலைப் புலிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். எனவே, சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதுடன் கடத்தப்பட்ட தமிழர் புனர் வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஏழு பேரின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே பதிலளிக்க வேண்டும். இதேவேளை கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மூலம் படையினருடன் இந்த ஒட்டுக் குழுக்கள் இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சிறிலங்கா படைத்தரப்பும் சிறிலங்கா அரசும் இராணுவத்துடன் ஒட்டுக் குழுக்கள் இயங்கவில்லை என திரும்பத் திரும்பத் தெரிவித்தாலும். விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் சிறிலங்காப் படையினரால் வழங்கப்பட்டமைக்கு சான்று பொருளாக அமைந்துள்ளது.


அடுத்ததாக இந்தத் தாக்குதல் சம்பவம் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் படையினர் இது வரை தாக்குதல் தங்களது கட்டுப்பாட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளதை ஒத்துக் கொள்ளவில்லை. அதேவேளை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறும் படையினர் எவ்வாறு சடலங்களை மீட்டு காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்க்க முடிந்தது என்ற கேள்வி எழுகின்றது. எனவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சிறிலங்கா அரசும், சிறிலங்கா படையினரும் கருணா குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கியமை நன்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் ஜெனீவா பேச்சிலும் அதன் பின்னரும் கூட வலியுறுத்திய போதும் எந்தவொரு ஒட்டுப்படையும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்று கூறிவந்த அரசு மாறாக ஒட்டுக் குழுக்களின் வன்முறைகள் அதிகரித்துச் சென்றன. குறிப்பாக ஜெனீவாப் பேச்சுக்கு பின்னிருந்து ஏப்ரல் 27ம் வரை 103 தமிழர்கள் படுகொலை இடம் பெற்றதாக விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட தமிழினப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் ஆயுதக் களைவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து சிங்களப் புலனாய்வுத்துறை பேரதிர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழ் தேசியத்துக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்த சிங்களப் புலனாய்வுத்துறை இப்போ கருணா குழுவின் முதுகு எலும்பு உடைக்கப்பட்ட கதையாக போய்விட்;ட நிலையில் எஞ்சிய கருணா குழுவினருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இனி கருணா கும்பலிக் செயற்பாடுகள் முடக்கப்பபடும் சூழல் உருவாகியிருக்கிறது. ஏனெனில், கருணா கும்பலின் முழுத்தொகையில் அரைவாசிப் பேர் வெலிக்கந்தை தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எஞ்சிய கருணா கும்பலை வைத்து மீளவும் அரச படைகள் நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்த நினைத்தால் அவர்களது ஆயுதங்களை களையும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படலாம். இவை மாத்திரமின்றி இந்த கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதன் மூலம் ஒரு தெளிவான செய்தியும் உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஈழவிடுதலை வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த ஒரு மாற்று ஆயுத அமைப்பும் உருவாக முடியாது. தமிழ் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் வகையில் உருவான சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது. அந்த அடிப்படையில் கருணா குழுவின் செயற்பாடுகள் சிலவேளைகளில் நெருக்கடிகளை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அதனால் எத்தகைய பின்னடைவோ அல்;லது பலவீன நிலைக்கோ தள்ளப்படவில்லை. எனவே, கருணா குழுவின் வரலாறு முடிவுக்குவரும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது மட்டுமே உண்மை.

மட்டக்களப்பு ஈழநாதம்

6 Comments:

Anonymous Anonymous said...

இந்தத் தாக்குதலில் உண்மையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் விடுதலைப் புலிகளே. அது தவிர, இத்தாக்குதலிற்கு கருணா குழு கொடுத்த பதிலடித் தாக்குதலில் 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இச்செய்தியை வெளியிட்டது தமிழ்நெற்.மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் கருணா குழுவினருக்கு அதிகம் ஆதரவு இருப்பதனால் பால்ராஜ் தலமையில் வன்னியிலிருந்து படையினரை கொண்டுவரவேண்டியதாயிற்று. அப்படைகூட இப்பொழுது திரும்பிச் செல்ல முடியாமல் முற்றுகையிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மிகவிரைவில் பதில் தெரியும்..

7:12 AM  
Blogger சனநாயகம் said...

கருணாவின் தோல்வியை மறைக்கும் இயலாமை உங்கள் வார்ததைகளில் தெரிகின்றது. 31பேர் கொலல்ப்பட்ட பின்னர் என்ன செய்வது என்று கைபிசைந்து நிற்கும் கருணாவிற்கு ஆறுதல் செய்ய யாருமே இல்லை என்ற கவலை எனக்கும் இருக்கத் தான் செய்கின்றது.

இதை விட கருணாவின் பெயரைப் பாவித்து தாக்குதல் நடத்திய சிங்கள இராணுவத்துக்கு கருணாவை காப்பாற்ற வேண்டிய தேவையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கருணாக் குழுவிற்கு ஆதரவு இருந்தால் மட்டக்களப்பில் துரத்தி அடிக்கும்போது அம்மே" என்று சிங்களத்தை நோக்கி ஓடியிருக்கக் கூடாது.

மற்றது பால்ராஜ் அண்ணா எங்க நிற்கின்றார் என்று எமக்குச் சொல்ல வேண்டாம். இலங்கையைப் பற்றித் தெரியாதவங்களுக்கு தரவையில் கொடி ஏற்றினவராம் என்று கதை விடலாம். அதுக்காக எமக்குமா??

ஆனர்ல ஒன்று, பணத்திற்காக போராட்டத்தை கேவலப்படுத்திய துரோகிகளுக்கு நீண்ட ஆயுள் இருந்ததில்லை. அது கருணாவிற்கும் பொருந்தும்

11:12 PM  
Anonymous Anonymous said...

//மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் கருணா குழுவினருக்கு அதிகம் ஆதரவு இருப்பதனால்//
//அம்மே" என்று சிங்களத்தை நோக்கி ஓடியிருக்கக் கூடாது//
!!!

11:41 PM  
Anonymous Anonymous said...

எது எப்பிடியோ, தமிழீழத்தின் சாபக்கேடு கருணாவிற்கு சாவுமணி அடித்தாயிற்று

4:19 PM  
Anonymous Anonymous said...

எனக்கு ஏதோ கருணா குழுவுக்கும் கருணாவுக்கும் சம்பந்தமில்லை போல் இருக்கிறது. வியாபார ரீதியில் சொன்னால் கருணா ஒரு sleeping partner. அதாவது கருணாவின் பெயரை பாவிப்பதற்காக சம்பளமும் தீடீர் உரை நிகழ்த்துவதற்கு Bonus ம் கொடுக்கப்படும் போல் இருக்கு.

10:45 AM  
Blogger சனநாயகம் said...

///எனக்கு ஏதோ கருணா குழுவுக்கும் கருணாவுக்கும் சம்பந்தமில்லை போல் இருக்கிறது. வியாபார ரீதியில் சொன்னால் கருணா ஒரு sleeping partner. அதாவது கருணாவின் பெயரை பாவிப்பதற்காக சம்பளமும் தீடீர் உரை நிகழ்த்துவதற்கு Bonus ம் கொடுக்கப்படும் போல் இருக்கு. ///
ஆமாம். இதை விட கருணாவின் சகோதரர் ரெஜியைக் கொலை செய்தது, ஒன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவு, அல்லது றோவாக இருக்கலாம் என்பதே எனது கருத்து. ஏனென்றால் கருணா மனந்திருந்தி புலிகள் பக்கம் சேரக்கூடாது என்பதற்கு, சகோதரளைக் கொன்று ஒரு வெறுப்பினை புலிகள் மீது ஏற்படுத்த முனைந்திருக்கலாம் என நினைக்கின்றேன்

ரெஜி கொல்லப்பட்ட இடத்தில் உடல் அனாதரவாகத் தான் கிடந்தது. கொன்றவர்களைப் பற்றித் தகவல் சொல்லப்படவில்லை. வழமை போல புலிகள் மீது பழி போடப்பட்டது.

எனவே நீங்கள் சொன்னது போல கருணாவை வைத்து புலிகயை அழிப்பது தான் சிங்களத்தின் எண்ணங்கள். அதற்கு துணை போகின்ற துரோகியாக அவன் சென்று விட்டான்

8:57 PM  

Post a Comment

<< Home