Sunday, May 07, 2006

தமிழர் அழிப்பிற்கு துரோகி தயாரித்தல்

பெற்றவள் நினைவில் இல்லை!
அவள் அரவணைத்து உச்சி -
முகர்ந்த நாட்கள் மனதில் இல்லை.

மனதில் அன்பு கொண்டு
மடியில் தூங்க வைத்த
தந்தையும் நினைவில் இல்லை.

தாய் கண்டிக்கையில்-என்
தம்பி இவன் என்று உச்சிமோர்ந்த
அக்காளும் நினைவில் இல்லை!

சிற்றுண்டி செய்தாலும், சிறு பையில்
போட்டெனக்கு மறைவில் தந்து வைத்த
மாமியும் நினைவில் இல்லை!

கனவு, நினைவெல்லம் கயவன் காசு!
சொந்தம், பந்தம் எல்லாம் விலையில் போச்சு!
தமிழன் சிந்திய இரத்தக்கறைகள் கண்டு கொண்டன!
நீ தான் இனத் துரோகி!

படர்கொடி கூட்டம் என பண்பின்றி
சுட்டெரிக்கும் வார்த்தைகளால் சிங்களப் பேரினவாதம்-மனதை
வைதிடும் வேளை, "வள்ளல் நீ! வார்த்தைகளால் புகழ்கின்றாய்" என,
சொல்லும் தகுதி கொண்டீர்!!!

பச்சிலம் பாலகரை, பாதையில் மறித்தங்கே,
துஸ்டர் சிங்களவர், துப்பாக்கியால் துவாரம் போடுகையில்,
எச்சில் வழிந்தோட, எலும்பை நக்கியபடி,
எலிகள் தான் செத்தது என எழுத்தில் விட்டுவீர்!!

பள்ளி மாணவியவள் பாடசாலை செல்கையில்
வல்லையில் காத்திருக்கும் வல்லூறுப் பிசாசுகள்,
கலவி செய்து கற்பைச் சூறையாட,
எல்லா நாட்டிலும் இது நடப்பது தான் என
இரப்பை நிரப்பிடுவீர்!!

தலையாட்டி வேடம் அணிந்து நீர்,
தலையைச் சிலுப்பி திரும்பினாலே,
அப்பாவியை அடித்துக் கொல்லும் காடையர் கூட்டம்!
பலம் என்று நினைக்காதே!
நாளை உன் தேவை முடிய உனக்கும் சிங்களவனின் கல்லறை!

ஒன்றை நினைவில் கொள்வீர்!
கன்றை இழந்த தாய் போல் கதறும் தமிழ்தாயின்
சாபம் உம்மைச் சும்மா விட்டிடுமா!
நாங்கள் துரோகியில்லை என நா கதற கத்தினாலும்,
செய்த பாவங்கள் சிறப்பாக விட்டுமா!!
பேய்களுடன் சேர்ந்து செய் கொட்டங்கள்!
விரைவில் மறந்திடுமா!!

இராவணன் காலம் முதல் விபுூசணன் போல்
பல துரோகிகள் கண்டது தமிழ் உலகம்!
துரோகிகளால் தான் அழிவு கண்டோம்!
கற்றது நல்ல பாடம்!-எனி
கவனம் கொள்வோம் எச்சில் நாய்களை எண்ணி!

0 Comments:

Post a Comment

<< Home