Sunday, May 07, 2006

தமிழர் அழிப்பிற்கு துரோகி தயாரித்தல்

பெற்றவள் நினைவில் இல்லை!
அவள் அரவணைத்து உச்சி -
முகர்ந்த நாட்கள் மனதில் இல்லை.

மனதில் அன்பு கொண்டு
மடியில் தூங்க வைத்த
தந்தையும் நினைவில் இல்லை.

தாய் கண்டிக்கையில்-என்
தம்பி இவன் என்று உச்சிமோர்ந்த
அக்காளும் நினைவில் இல்லை!

சிற்றுண்டி செய்தாலும், சிறு பையில்
போட்டெனக்கு மறைவில் தந்து வைத்த
மாமியும் நினைவில் இல்லை!

கனவு, நினைவெல்லம் கயவன் காசு!
சொந்தம், பந்தம் எல்லாம் விலையில் போச்சு!
தமிழன் சிந்திய இரத்தக்கறைகள் கண்டு கொண்டன!
நீ தான் இனத் துரோகி!

படர்கொடி கூட்டம் என பண்பின்றி
சுட்டெரிக்கும் வார்த்தைகளால் சிங்களப் பேரினவாதம்-மனதை
வைதிடும் வேளை, "வள்ளல் நீ! வார்த்தைகளால் புகழ்கின்றாய்" என,
சொல்லும் தகுதி கொண்டீர்!!!

பச்சிலம் பாலகரை, பாதையில் மறித்தங்கே,
துஸ்டர் சிங்களவர், துப்பாக்கியால் துவாரம் போடுகையில்,
எச்சில் வழிந்தோட, எலும்பை நக்கியபடி,
எலிகள் தான் செத்தது என எழுத்தில் விட்டுவீர்!!

பள்ளி மாணவியவள் பாடசாலை செல்கையில்
வல்லையில் காத்திருக்கும் வல்லூறுப் பிசாசுகள்,
கலவி செய்து கற்பைச் சூறையாட,
எல்லா நாட்டிலும் இது நடப்பது தான் என
இரப்பை நிரப்பிடுவீர்!!

தலையாட்டி வேடம் அணிந்து நீர்,
தலையைச் சிலுப்பி திரும்பினாலே,
அப்பாவியை அடித்துக் கொல்லும் காடையர் கூட்டம்!
பலம் என்று நினைக்காதே!
நாளை உன் தேவை முடிய உனக்கும் சிங்களவனின் கல்லறை!

ஒன்றை நினைவில் கொள்வீர்!
கன்றை இழந்த தாய் போல் கதறும் தமிழ்தாயின்
சாபம் உம்மைச் சும்மா விட்டிடுமா!
நாங்கள் துரோகியில்லை என நா கதற கத்தினாலும்,
செய்த பாவங்கள் சிறப்பாக விட்டுமா!!
பேய்களுடன் சேர்ந்து செய் கொட்டங்கள்!
விரைவில் மறந்திடுமா!!

இராவணன் காலம் முதல் விபுூசணன் போல்
பல துரோகிகள் கண்டது தமிழ் உலகம்!
துரோகிகளால் தான் அழிவு கண்டோம்!
கற்றது நல்ல பாடம்!-எனி
கவனம் கொள்வோம் எச்சில் நாய்களை எண்ணி!

Saturday, May 06, 2006

கருணா குழுவின் வரலாறு முடிவு!!!

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தின் காசம் குளம் என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த கருணா குழு முகாம்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்ட செய்தி மூலம் விடுதலைப் புலிகள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

01) எங்கும் எப்போதும் சென்று தாக்கும் திறன். விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

02) போர் நிறுத்த உடன்பாட்டின்படி அரசு செய்யாத ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவை விடுதலைப் புலிகள் செய்தமை.

03) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் கருணா குழுதான். தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை கடத்தியது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

04) கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் படையினரால் வழங்கப்பட்டமை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

05) படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் கருணாகுழு இயங்கி வருவதற்கான ஆதாரங்கள். 06) கருணா குழு முகாம் மீது விடுதலைப் புலிகளின் சிறப்புப்படையணி தாக்குதல் நடத்திய போது படையினர் கருணா குழுவுக்கு உதவியதிலிருந்து கருணா குழுவினருக்கு இராணுவம் உதவுவது போன்ற பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருணா குழு உட்பட இதர ஆயுதக் குழுக்களை கையகப்படுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக கருணா குழுவை விடுதலைப்புலிகளுக்கு நிகரான ஒரு அமைப்பாக தென்னிலங்கை பேரினவாத ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின் படைத் தரப்பினரும் கருணா கும்பலின் உதவியுடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்கலாம் என்ற கற்பனாவாதத்தில் மிதந்தனர்.


எனினும், பொலநறுவை காசம்குளம் பகுதியில் கருணா கும்பலின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் 'எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்' என்பதை போராளிகள் மீளவும் நிலைநிறுத்திக் காட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைப் புறமான ஓர் இடமே காசங்குளம். இது வெலிக்கந்தையிலிருந்து கிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. பொலநறுவை வெலிக்கந்தைக்கு வடக்கே ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள திபுலானை என்ற இடத்திற்கும். காண்டக்காடு என்ற இராணுவ முகாமிற்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் கருணா குழுவின் முகாம் இருந்;துள்ளது. இவர்களே தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் உட்பட பல்வேறு கடத்தல் கொலை, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவ தினமான சனிக்கிழமை நள்ளிரவு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது கருணா குழுவைச் சேர்ந்த 31 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துப் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களைப் படையினர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஐவரை விடுதலைப் புலிகள் உயிருடன் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விடுதலைப் புலிகளால் கருணா குழுவிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பி.கே.எல்.எம்.ஜி - 02,
ஆர்.பி.ஜி- 01,
81 மில்லிமீற்றர் மோட்டார்- 01,
ஏ.கே.எல். எம்.ஜி.கள் - 06,
தன்னியக்க றைபிள்- 16,
கைத்துப்பாக்கிகள் - 02,
தகவல் தொடர்பு சாதனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முகாம் தாக்கியழிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடமிருந்து கடத்தப்பட்ட இருவாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது கருணா குழுவுக்கு உதவி செய்யும் வகையில் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி முகாம் திரும்பிய பின்னர் படுகாயமடைந்த கருணா கும்பலை படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்து தெரிவிக்கையில்:- ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்த உடன்படிக்கையில் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை அரசு களையவில்லை. இத்தகைய சூழலில் தான் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம். எதிர்காலத்திலும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாது தொடர்ந்து அரசு இயங்கி வந்தால் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என தயாமோகன் குறிப்பிட்;டிருந்தார்.

இதேவேளை கருணாகுழு முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது கருணா குழுவின் முக்கிய நபர்களான சின்னத்தம்பி - மார்க்கன், றியசீலன் உள்ளிட்ட பலர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி முகாமிலிருந்த கருணா கும்பலையே திருமலை, வாகரை மற்றும், வாழைச்சேனை பகுதிகளில் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு படையினர் பயன்படுத்தி வந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எந்த ஒரு ஒட்டுக்குழுவும் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றலுக்கும், வலிமைக்கும் முகம் கொடுத்து தாக்குப்பிடிக்க முடியாது என்பதுடன் எங்கு சென்றாவது தமிழ்த் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழிக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை மீளவும் நிருபித்துள்ளனர்.

அடுத்ததாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்தியபோது விடுதலைப் புலிகளுக்கு கருணா கும்பல் ஒரு சவாலான சக்தி என கற்பனைவாதத்தி;ல் மிதந்த பேரினவாத சக்திகளுக்கு அதனை காசங்குளம் தாக்குதல் மூலம் யார் சவாலான சக்தி என்பதை வெளிப்படுத்தி விட்டனர். அடுத்ததாக வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கொலையாளிகளை, கடத்தல்காரர்களை முகாமுக்குள்ளும் முகாம்களுக்கு அருகிலும் வைத்துக் கொண்டு பொலிசார் கண் துடைப்பிற்கு வெலிக்கந்தைப் பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் மாத்திரம் தேடுதல் நடத்தப்பட்டது.


ஆனால் காசங்குளம் கருணா முகாம் தாக்குதல் மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சொந்தமான வாகனம் மீட்கப்பட்டதிலிருந்து தமிழர் புனர் வாழ்வுக்கழகப் பணியாளர்களை கருணா குழுதான் கடத்தியுள்ளனர் என்ற விடயத்தை விடுதலைப் புலிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். எனவே, சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதுடன் கடத்தப்பட்ட தமிழர் புனர் வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஏழு பேரின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே பதிலளிக்க வேண்டும். இதேவேளை கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மூலம் படையினருடன் இந்த ஒட்டுக் குழுக்கள் இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சிறிலங்கா படைத்தரப்பும் சிறிலங்கா அரசும் இராணுவத்துடன் ஒட்டுக் குழுக்கள் இயங்கவில்லை என திரும்பத் திரும்பத் தெரிவித்தாலும். விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் சிறிலங்காப் படையினரால் வழங்கப்பட்டமைக்கு சான்று பொருளாக அமைந்துள்ளது.


அடுத்ததாக இந்தத் தாக்குதல் சம்பவம் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் படையினர் இது வரை தாக்குதல் தங்களது கட்டுப்பாட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளதை ஒத்துக் கொள்ளவில்லை. அதேவேளை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறும் படையினர் எவ்வாறு சடலங்களை மீட்டு காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்க்க முடிந்தது என்ற கேள்வி எழுகின்றது. எனவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சிறிலங்கா அரசும், சிறிலங்கா படையினரும் கருணா குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கியமை நன்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் ஜெனீவா பேச்சிலும் அதன் பின்னரும் கூட வலியுறுத்திய போதும் எந்தவொரு ஒட்டுப்படையும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்று கூறிவந்த அரசு மாறாக ஒட்டுக் குழுக்களின் வன்முறைகள் அதிகரித்துச் சென்றன. குறிப்பாக ஜெனீவாப் பேச்சுக்கு பின்னிருந்து ஏப்ரல் 27ம் வரை 103 தமிழர்கள் படுகொலை இடம் பெற்றதாக விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட தமிழினப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் ஆயுதக் களைவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து சிங்களப் புலனாய்வுத்துறை பேரதிர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழ் தேசியத்துக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்த சிங்களப் புலனாய்வுத்துறை இப்போ கருணா குழுவின் முதுகு எலும்பு உடைக்கப்பட்ட கதையாக போய்விட்;ட நிலையில் எஞ்சிய கருணா குழுவினருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இனி கருணா கும்பலிக் செயற்பாடுகள் முடக்கப்பபடும் சூழல் உருவாகியிருக்கிறது. ஏனெனில், கருணா கும்பலின் முழுத்தொகையில் அரைவாசிப் பேர் வெலிக்கந்தை தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எஞ்சிய கருணா கும்பலை வைத்து மீளவும் அரச படைகள் நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்த நினைத்தால் அவர்களது ஆயுதங்களை களையும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படலாம். இவை மாத்திரமின்றி இந்த கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதன் மூலம் ஒரு தெளிவான செய்தியும் உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஈழவிடுதலை வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த ஒரு மாற்று ஆயுத அமைப்பும் உருவாக முடியாது. தமிழ் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் வகையில் உருவான சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது. அந்த அடிப்படையில் கருணா குழுவின் செயற்பாடுகள் சிலவேளைகளில் நெருக்கடிகளை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அதனால் எத்தகைய பின்னடைவோ அல்;லது பலவீன நிலைக்கோ தள்ளப்படவில்லை. எனவே, கருணா குழுவின் வரலாறு முடிவுக்குவரும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது மட்டுமே உண்மை.

மட்டக்களப்பு ஈழநாதம்

Friday, May 05, 2006

ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகள்!!

சமீபத்தில் ஹல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த பேட்டி தான் இந்தப் பயங்கரச் செய்தி. வெகு சாராணமாய் ஒரு பேட்டி ஒன்றில் தமிழ்மக்களைக் கொல்வோம் என்று அவர் சொன்னபோது சிங்கள அரசியல்வாதிகள் எவரிடம் இருந்தும் மறுப்பு அறிக்கை கூட வரவில்லை. அல்லது எவ்வித மிதவாதப் போக்குள்ளவர்களிடம் இருந்து கூட கண்டணம் ஏதும் வரவில்லை. சொல்லப்போனால் ஒட்டு மொத்த சிங்கள தேசமும் அதை விரும்புவதற்கான அடையாளமே இது.

சிறிலங்கா தேசமும், தமிழர் தேசமும் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு இருந்த காரணத்தால், இருவரும் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்தார்கள். அந்த ஒரு பாவத்துக்காக சிங்கள தேசம் ஆங்கிலேய வெளியேற்றத்தின் பின் தனது மேலாண்மையை தமிழர் மத்தியில் திணிக்கப் பார்க்கின்றது. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட முஸ்லீம்களுடன் எந்த மதம் உயர்ந்தது என்று விவாதித்து புளங்கிதம் அடைந்திருந்தது சிங்கள தேசம். விடுதலைப்புலிகளின் தலைவர் சொன்னபடி அது ஒரு "மகாவம்ச கிறுக்குத்தனம்".

அதன் பின் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழி ஆட்சிப் பிரகடனம்,முதுகில் குத்தப்பட்ட "சிறீ"( சிங்கள மொழி ஆட்சிமொழியாவதை தமிழர் எதிர்ததால் கையில் அகப்பட்ட தமிழ் மக்களுக்கு முதுகில் சிறீ என்ற சிங்களச் சொல்லை, கம்பியைச் சூடாக்கி பதித்து வைத்தது. சொல்லப் போனால் மாட்டுக்கு குறி சூடுதல் போன்ற வேதனை) தமிழ் மாணவர்களை முடக்கும் வெட்டுப் புள்ளி அறிவிப்பு, தமிழர் விரட்டப்பட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள், என்று சிங்கள மேலாண்மையை எதிர்த்து தான் தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டி வந்தது.

இதை விலை போனவர்கள் மறந்ததாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதை ஞாபகப்படுத்துவதற்கு தான் சம்பக்க ரணவக்கவின் அறிவிப்பு சொல்கின்றது. ஹல உறுமய இன்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாக இருக்கின்றது. ஹல உறுமையவின் உறுப்பினரான முன்னாள் இனவாதப் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொட்டகதெனிய எல்லோரையும் மிஞ்சிய இனவாதி. ஒரு காலத்தில் தமிழ் மக்களை கொழும்பை விடடே துரத்த வேண்டும் என்று மேடைகளில் முழக்கம் போட்டவர். இப்போது மகிந்தவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்றார்.

எனவே ஹல உறுமைய சொன்னது போன்ற, ஒரு லட்சம் தமிழ்மக்களைக் கொல்வோம் என்ற சொன்னது அதனால் சாத்தியப்படாத ஒன்றல்ல. இராணுவப் போராட்டத்தில் அப்பாவி தமிழ்மக்களைக் காவு கொள்ள ஏன் நினைக்கவேண்டும். அது வெறுமமே தூக்கி எறிந்து விட முடியாது. அது சிங்கள அடிமனதில் உள்ள உணர்வுகள். இலங்கை சிங்களவனுக்குத் தான் சொந்தம். தமிழர் எல்லாம் சிங்களம் என்ற மரத்தில் வளரும் படர்கொடிகள் என்று யுத்த தேவதை "சந்திரிக்க அம்மையார்" ஆபிரிக்க மாநாடு ஒன்றில் கேலப்படுத்தி இருந்தார்.

ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகளை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் ஆரம்பித்து விட்டது என்பதை சமீபத்திய தமிழர் படு கொலைகள் முரசறிவிக்கின்றன. நேற்று முன்தினம் கூட நெல்லியடி எனும் இடத்தில் நண்பனின் பிறந்தநாள் நிகழ்விற்கு இரு ஆட்டோ வாகனங்களில் சென்ற 7 இளைய செல்வங்களை இராணுவம் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கின்றது. அதற்கு அது சொன்ன காரணம், கைக்குண்டு (கிரனைட்) ஒன்றை எறிந்தார்களாம். ஒரு கைக்குண்டை எறிய ஏழு பேர் தேவையா என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதை விட ஆட்டோவிலிருந்தபடி அது வீசுவதில் வசதியாக இருக்காது என்பதைச் சிங்கள இராணுவம் ரெம்ப அறியும்.

ஆக, தமிழ்மக்களை கொல்வதில் நியாயங்களைத் தேடுவதில் தான் இராணுவம் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றது.

*திருகோணமலையில் ஜந்து பள்ளி மாணவர்களை படுக்க வைத்த, கிட்லர் பாணியில் தலையில் சுட்டுக் கொன்றது,
*புத்தூரில் 5 இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.
*விமானத்தாக்குதலில் 17 தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டது, *திருகோணமலையில் சிங்களக் காhடையர்களால் 16 தமிழ்மக்கள் கொல்லப்பட்டது.
என்று பெருமளவினான தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவது தான் தகவலாக வருகின்றதே தவிர, தினமும் வௌ;வேறு இடங்களில் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படும் தமிழ்மக்களைப் பற்றி செய்தித் தாள்களும் கண்டு கொள்வதில்லை.

மகிந்த ஆட்சி வந்த பிற்பாடு சுமார் 600 வரையிலான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். கொன்று விட்டு இராணுவம், புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஒரு பழியைப் போடும். இல்லாவிடின், புலிகள் தான் கொல்லப்பட்டதாக அறிக்கை விடும். உண்மையில் சிங்கள பேரினவாத்துக்கு இது பற்றி எவ்வித வருத்தமும் இல்லை. கொல்லப்படும் மக்கள் தமிழ்மக்கள் தானே! அதன் ஒரு லட்சம் கனவுகள் ஈடேறிக்கொண்டிருப்பதைத் தான் நிகழ்காலம் காட்டுகின்றது.

எனவே தமிழனும் மாற்று வழிகளைத் தேடவேண்டி ஏற்படுகின்றது. தேசியத் தலைவர் சொன்னவாறு "தமிழன் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்கே சாகின்றான்" என்ற கூற்றை ஆதாரப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இது தமிழன் மீது திணிக்கப்பட்ட கொடுமை. அதை அகற்றினால் தான் சுந்திரக் காற்றை சுவாசிக்க மடியும். இல்லாவிடின் அந்த திண்ப்பை சுமந்தபடி வாழ வேண்டும். அதற்கு தன்மானமுள்ளவன் இடம் அளிக்கப் போவதில்லை